You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக வேட்பாளரை வரவேற்க வெடித்த பட்டாசால் தீவிபத்து - வீடுகள் எரிந்துவிட்டதாக மக்கள் புகார் - காணொளி
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் கோட்டாட்சியர் அலுவலகம் இருக்கும் பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை வரவேற்க திரண்டிருந்த பாஜக நிர்வாகிகள், வெடி வெடித்துள்ளனர்.
அதில் இருந்து பறந்த தீப்பொறி பக்கிரிசாமி என்பவரின் குடிசை வீட்டில் விழுந்துள்ளது. இதையடுத்து, வீடு முழுமையாக தீப்பற்றி எரிந்தது. மேலும், அருகே இருந்த சுப்ரமணியன் என்பவரின் சிமிண்ட் சீட் வீடும் பகுதியளவு சேதமடைந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதப்படுத்தினர். மேலும், தீக்கிரையான வீட்டை பார்வையிட்ட பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயன், இழப்பை சரி செய்து தருவோம் என உறுதி அளித்தார். வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது இரண்டு பிரிவுகளில் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)