You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அன்று புலம்பெயர் விவசாயி, இன்று நிறுவன இயக்குநர் - சாதனை படைத்த பழங்குடி பெண்ணின் வெற்றிக் கதை
நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை பகுதியில் வசிக்கும் பெண்கள் உட்பட பழங்குடி விவசாயிகள் வேலை இல்லாத மாதங்களில் அண்டை மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வேலை செய்வது வழக்கமாக இருந்தது. இதனை தனது முயற்சியின் மூலம் மாற்றியுள்ளார் விவசாயியான வெண்ணிலா.
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லி மலை பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி .இங்குள்ள பெண்கள் உட்பட பழங்குடி விவசாயிகள் வேலை இல்லாத மாதங்களில் அண்டை மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வேலை செய்வதும் மழை காலங்களில் மீண்டும் கொல்லி மலைக்கு வருவதும் என வாடிக்கையாக இருந்து வந்துள்ளனர்.
இதனால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்த பெண்கள் அதை மாற்றுவதற்கு முயற்சி எடுத்தனர். அவர்களில் ஒருவர் தான் கொல்லி மலையில் உள்ள ஆலத்தூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த வெண்ணிலா.
'வாடி' என்று அழைக்கப்படும் சிறு தோட்டம் என்கிற விவசாய முறையைப் பின்பற்றி பயிரிட தொடங்கினர். ஆலத்தூர் கிராமத்து பெண் விவசாயிகளை இணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு ஒன்றை உருவாக்கினார் வெண்ணிலா.
இவர்களைப் போல கொல்லி மலையின் பல்வேறு கிராமங்களின் இயங்கி வரும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை இணைத்து தனி நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் இயக்குநர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறார் வெண்ணிலா.
புலம்பெயர்ந்து வந்த பெண்களின் வாழ்க்கை தற்போது தற்சார்பு முறைக்கு மாறியுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். ( முழு தகவல் காணொளியில்)
தயாரிப்பு : மோகன்
ஒளிப்பதிவு & எடிட்டிங்: மதன் , ஜெரீன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்