You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: டிரம்பின் அடுத்த குறி - மருந்துகள் மீதான 100% வரி இந்தியாவை பாதிக்குமா?
அடுத்தடுத்து வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரி விதிக்காமல் விட்டிருந்த சில துறைகளில் ஒன்றான மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதித்துள்ளார்.
கனரக லாரிகள், சமையலறை மற்றும் குளியலறையில் பொருத்தப்படும் பொருட்களின் இறக்குமதி மீதும் அவர் வரி விதிப்பதாகக் கூறினார். இவை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
அமெரிக்காவுக்கான மருந்து ஏற்றுமதியில் இந்தியா முக்கிய இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே, 50 சதவீத வரி, H-1B விசாவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களால் இந்தியா சிக்கலை சந்தித்து வரும் நிலையில், இந்த புதிய அறிவிப்பு இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு