You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிங்கத்துக்கு பயந்து கூண்டுக்குள் அடையும் விவசாயிகள்
சிங்கத்துக்கு பயந்து கூண்டுக்குள் அடையும் விவசாயிகள்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் கிர் வனப்பகுதியில் உள்ள விவசாயிகள் உயரமான கூண்டுகளில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
கரும்பு தோட்டத்துக்கு நடுவே 10 அடி உயரத்தில் இந்த கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது, விவசாயி தனது பயிரை காக்க மட்டுமல்ல, அவரது உயிரையும் காப்பதற்கு.
கிர் சோம்நாத் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சேதன், நான்கு பக்கமும் இரும்பு கிரில்லால் ஆன இந்த உயரமான கூண்டை உருவாக்கி உள்ளார். சிங்கத் தாக்குதல்களிலிருந்து தன்னை பாதுகாக்க இந்த கூண்டை உருவாக்கியதாக சேதன் கூறுகிறார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு