You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி : மோதியின் சீனப் பயணம் அமெரிக்காவுடன் விரிசலை ஏற்படுத்துமா?
பிரதமர் நரேந்திர மோதியின் சீனப் பயணம் பற்றி அமெரிக்காவில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான உறவு மோசமடைந்து வரும் பின்னணியில் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ஊடகங்கள் இந்தியாவை எச்சரித்தும் உள்ளன.
அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்தது. அதன்பிறகான மோதியின் சீனப் பயணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஒருபுறம் இது இந்திய-சீன உறவை மேம்படுத்தக்கூடும் என்று பார்க்கப்படுகிறது, மறுபுறம் மோதி மற்றும் டிரம்ப் இடையேயான விரிசலை சாதகமாக்கிக் கொண்டு ரஷ்யா மற்றும் சீனா இந்தியாவை கவர முயற்சிப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
சர்வதேச விவகாரங்கள் குறித்த நிபுணர்களின் விரிவான கருத்துகளை இந்த காணொளி அலசுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு