கேரள செவிலியர் நிமிஷாவுக்கு ஏமனில் ஏன் மரண தண்டனை? குருதிப் பணம் என்றால் என்ன?
கேரளாவின் செவிலியர்கள் பலரும் வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை கண்டு, தன்னுடைய குடும்பத்தை ஏழ்மையில் இருந்து மீட்கும் கனவுகளுடன் 2008இல் ஏமன் நாட்டிற்கு சென்றவர் செவிலியர் நிமிஷா பிரியா.
ஆனால், இன்று நிமிஷாவை ஏமனில் இருந்து மீட்டுக் கொண்டுவர போராடி வருகிறது அவரது குடும்பம்.
ஏமன் நாட்டில், 2017இல் நடந்த ஒரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா.
அவரை மீட்க 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' (Save Nimisha Priya International Action Council) என்ற குழுவும், நிமிஷாவின் தாய் பிரேமா குமாரியும் பல்வேறு முயற்சிகள் எடுத்துவந்தனர். இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார் பிரேமா குமாரி.
ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினரிடம் 'ப்ளட் மணி' (Blood money) எனும் இழப்பீடு தொகை கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியும்.
இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் நாட்டு அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு) ஒப்புதல் அளித்துள்ளார்.
நிமிஷா பிரியா எங்கே? குருதி பணம் என்றால் என்ன?
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



