புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய முதல் உரை - என்ன பேசினார்?

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய முதல் உரை - என்ன பேசினார்?
பிரசுரிக்கப்பட்டது

பிரதமர் புதிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழு உரையில், “ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறும்.

மே 28 அத்தகைய ஒரு நாள் தான். இது வெறும் கட்டடம் இல்லை, 140 கோடி இந்திய மக்களுடைய லட்சியத்தின் சின்னம். இது இந்தியாவின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகுக்கு வழங்குகிறது,” என்று கூறினார்.

மேலும், “இந்தப் புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்குச் சாட்சியாக விளங்கும். செங்கோல் இங்கு நிறுவப்பட்டிருக்கிறது. இந்தச் செங்கோல் சோழ வம்சத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது.

இப்படிப்பட்ட புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நம்முடைய அதிர்ஷ்டம். இனி அவை தொடங்கும்போதெல்லாம் இந்தச் செங்கோல் நம்மை ஊக்குவிக்கும்.

இந்தியா முன்னேறும்போது, உலகமும் முன்னேறும். இந்தியாவினுடைய வளர்ச்சியின் மூலம் உலகின் வளர்ச்சிக்கும் இந்தப் புதிய நாடாளுமன்றம் வழிவகுக்கும்,” என்று பேசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: