BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், பட்டியலின சமூகத்திற்கு அனுமதி மறுப்பு: கரூர் கோவிலுக்கும் அதிகாரிகள் பூட்டு - தீண்டாமை தொடர்வது ஏன்?, சீனா கூறுவதுபோல் இந்திய ராணுவம் பலவீனமானதா?, இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த வீடு இன்று எப்படி இருக்கிறது? - பிபிசி தமிழ் கள ஆய்வு, ஆண் துணை இல்லாமல் கர்ப்பமான பெண் முதலை- இது எப்படி சாத்தியமானது?, ஜீன்ஸை துர்நாற்றம் வரும் வரை அணியக் கூடியவரா? நீங்களும் இந்த உலகளாவிய இயக்கத்தில் ஒருவரே ஆகிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த வீடு இன்று எப்படி இருக்கிறது? - பிபிசி தமிழ் கள ஆய்வு
தென்னிந்திய திரைத்துறையில் அசைக்க முடியாத நட்சத்திரமாக பிரகாசித்தவர், தமிழக அரசியலில் எவராலும் மறக்க முடியாத 'புரட்சி தலைவராக' விளங்கியவர் எம்.ஜி.ஆர். இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலபிட்டி என்ற பிரதேசத்தில் 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தார். இலங்கையில் உள்ள எம்.ஜி.ஆர் பிறந்த வீடு இன்று எப்படி இருக்கிறது? முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
பட்டியலின சமூகத்திற்கு அனுமதி மறுப்பு: கரூர் கோவிலுக்கும் அதிகாரிகள் பூட்டு - தீண்டாமை தொடர்வது ஏன்?

பட்டியலின மக்களை உள்ளே அனுமதிக்காததால் ஏற்பட்ட பிரச்னையில், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வியாழனன்று சீல் வைக்கப்பட்டது. இக்கோவில், மேலப்பதியைச் சுற்றியிருக்கும் எட்டு ஊர்களில் வசிக்கும் ஒரு சமுகத்தினருக்குச் சொந்தமானது. இது சுமார் 1500 குடும்பங்களின் குலதெய்வ கோவில் என்றும் கூறப்படுகிறது. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சீனா கூறுவதுபோல் இந்திய ராணுவம் பலவீனமானதா?
ஆசிய நாடுகளின் முக்கியமான பாதுகாப்பு மன்றமான ஷாங்கிரி-லா (Shangri-La) பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சீனக் குழு ஒன்று, இந்தியாவின் ராணுவத் திறனைக் கேள்விக்குள்ளாக்கி புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்கிரி- லா பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீனா ராணுவத்தின் பிரதிநிதி, "இந்திய ராணுவம் சீன ராணுவத்துக்கு சவால் அளிக்கக்கூடியது அல்ல" என்று குறிப்பிட்டார். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ஆண் துணை இல்லாமல் கர்ப்பமான பெண் முதலை- இது எப்படி சாத்தியமானது?
ஆண் முதலையின் துணை இல்லாமலேயே பெண் முதலை கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் முதல்முறையாக கோஸ்டா ரிகாவில் உள்ள காட்டுயிர் காப்பகம் ஒன்றில் பதிவாகியுள்ளது.
99.9% மரபணு ரீதியாக தன்னைப் போலவே ஒரு கருவை இந்த பெண் முதலை உருவாக்கியுள்ளது. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ஜீன்ஸை துர்நாற்றம் வரும் வரை அணியக் கூடியவரா? நீங்களும் இந்த உலகளாவிய இயக்கத்தில் ஒருவரே...

பட மூலாதாரம், Getty Images
உங்கள் துணிகளை துவைப்பதற்கு நீங்கள் சோம்பலாக உணர்கிறீர்களா? ஒரு ஜீன்ஸ் பேண்டை வாரக்கணக்கில் துவைக்காமல் பயன்படுத்துகிறீர்களா? துணிகளில் அதிகமான அழுக்கோ, துர்நாற்றமோ வந்தால் மட்டும்தான் துவைப்பது குறித்து யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் ‘நோ வாஷ் இயக்கத்தில் ’ (No wash Movement) ஒருவர். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























