You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத்தின் உப்பு உற்பத்தி செய்யும் முதல் தலைமுறை பெண் வாக்காளர்களின் கோரிக்கை என்ன?
குஜராத்தின் கட்ச் பகுதியின் சோட்டா ரண் பகுதியில் உள்ள தண்ணீர் உப்புத்தன்மை கொண்டது.
இந்த உப்புத்தண்ணீரில் இருந்து உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பு மக்களின் வருமானத்திற்கான வழியாக உள்ளது. இந்தப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பம்ப் மூலம் நிலத்தில் இருந்து தண்ணீரை எடுத்து அதிலிருந்து உப்பு தயாரிக்கின்றனர்.
இவர்களில் ஒருவர் 20 வயதான பூஜா டாபிகா பட்வார். பூஜாவும் உப்பு தயாரிப்பதில் தன் குடும்பத்திற்கு உதவுகிறார். இந்தப்பகுதியில் போடப்பட்டுள்ள சோலார் பேனல்கள் காரணமாக மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பூஜாவின் வீட்டின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகளும் இப்போது நடக்கிறது. சோலார் பேனல் போடப்பட்டபிறகு எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளது, இதன்மூலம் சிறிது பணத்தை சேமிக்க முடிகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.
இங்கு சோலார் பேனல்கள் அமைப்பதற்கு மக்களுக்கு மானியம் கிடைக்கிறது. இதன்காரணமாக இவர்களுக்கு டீசல் தேவை இருப்பதில்லை. குடும்பத்தில் சேமிப்பு செய்யமுடிகிறது என்பதில் பூஜாவுக்கு மகிழ்ச்சி. ஆனால் அரசு கல்விக்காக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)