You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2024 நாடாளுமன்றத் தேர்தல் - தமிழ்நாட்டில் கவனிக்கப்படும் 10 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், இந்த முறை கவனிக்கப்படும் பத்து வேட்பாளர்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 38வயதான தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் களமிறங்குகிறார். ஐ பி எஸ் அதிகாரியாக இருந்து அரசியலில் குதித்துள்ள அண்ணாமலை குறுகிய நாட்களிலேயே பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார். ஊடகங்களில் பரபரப்பான பேசுபொருட்களை அவ்வபோது வழங்கி வரும் அண்ணாமலைக்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது.
அதே தொகுதியில் அதிமுகவின் ஐடி பிரிவு தலைவரான சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். 1990களில் அவரது தந்தை கோவிந்தராசு அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலையின் அணுகுமுறை காரணமாக கூறப்பட்ட நிலையில், அதிமுகவுக்கு பாஜகவுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. களத்தில் ஏற்கெனவே இரு வேட்பாளர்களுக்கும் இடையில், சூடான விவாதங்கள் தொடங்கி விட்டன.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தனது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் அவர், விஜய்காந்த மறைவுக்கு பின் அவருக்கு ஆதரவான வாக்குகளை திரட்ட முயல்கிறார்.
இவர்கள் மட்டுமல்லாமல் தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார், நீலகிரியில் திமுக சார்பாக போட்டியிடும் ஆ. ராசா, பாஜக சார்பாக போட்டியிடும் எல் முருகன், சிதம்பரத்தில் விசிக சார்பாக போட்டியிடும் தொல் திருமாவளவன், தேனியில் போட்டியிடும் டிடிவி தினகரன்உள்ளிட்ட பலரும் கவனிக்கப்படுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)