You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக் கோப்பையுடன் மோதியைச் சந்தித்த இந்திய அணி
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
பெரில் புயல் காரணமாக அணி பார்படாஸில் இருந்து புறப்பட முடியாமல் சிக்கியிருந்தது. புயல் காரணமாக பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து சிறப்பு விமானம் மூலம் இந்தியக் குழுவினர் டெல்லி வந்தடைந்தனர்.
டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் ரசிகர்கள் ஏற்கனவே குவிந்திருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து டெல்லியின் ஐடிசி மவுரியா ஹோட்டலுக்கு குழு சென்றடைந்தது. பின்னர் இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் சந்தித்து கோப்பையைக் காண்பித்து மகிழ்ந்தனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)