காணொளி: அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்பட்ட ஃபிஃபா நடுவர் ஒமர் ஆர்டனை வரவேற்ற சோமாலியா

காணொளி: அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்பட்ட ஃபிஃபா நடுவர் ஒமர் ஆர்டனை வரவேற்ற சோமாலியா
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட உலகக் கோப்பை நடுவருக்கு சோமாலியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றும் முதல் சோமாலியராக ஒமர் ஆர்டன் தேர்வாகியிருந்தார்.

ஆனால் அமெரிக்காவுக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டதால், அதிகாரப்பூர்வ நடுவர்கள் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

"பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலருடனான தொடர்பு காரணமாக" ஒமர் அர்டன் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"அடுத்த உலகக் கோப்பையில் நான் பங்கேற்பேன். அதில் சிறப்பான தடம் பதிப்பேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

சோமாலிய மக்கள் அனைவரும் சோமாலியாவின் நற்பெயரை பாதுகாக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நல்ல சூழ்நிலையோ மோசமானதோ சோமாலியா நம்முடைய நாடுதான் என்று ஒமர் ஆர்டன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு