You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விருதுநகர் அருகே விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலருக்கு முன் ஜாமீன்
கிராம சபைக் கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி மன்றச் செயலாளருக்கு முன் ஜாமீன் கொடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கங்காகுளம் கிராமத்தில் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி அம்மையப்பன்
கோரிக்கையை முன்வைத்து பேசினார்.
அப்போது, ஊராட்சி மன்றச் செயலாளர் தங்கப்பாண்டியன் விவசாயியை காலால் எட்டி உதைத்தார்.
இது தொடர்பாக ஊராட்சி மன்றச் செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் எனவே,தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது, மனு தாரர் சார்பில் நிபந்தனையற மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி மன்றச் செயலாளர் தங்கபாண்டியனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு வழங்கியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)