You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வீட்டினுள் புகுந்த சிறுத்தை - கதவை பூட்டி தப்பிய நபர்
காணொளி: வீட்டினுள் புகுந்த சிறுத்தை - கதவை பூட்டி தப்பிய நபர்
பிரசுரிக்கப்பட்டது
ஜூன் 24 அன்று இரவு, உதகை அருகே மாயார் கிராமத்தில் செல்வப்பா என்பவரது வீட்டின் உள்ளே சிறுத்தை புகுந்தது.
உடனே அவர் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு வெளியே சென்றார்.
தகவல் அறிந்து வந்த மசனகுடி வனத்துறையினர், ஜூன் 25 அன்று அதிகாலை அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தனர்.
பின்னர் முதுமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனரின் உத்தரவின்படி, அது வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனசரக அலுவலர் ராஜன் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு