You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் அரசு ஆதரவு பேரணி அருகே வான்வழி தாக்குதல்
மத்திய இரானில் அரசு ஆதரவுப் பேரணிக்கு அருகே வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இரான் அதி உயர் தலைவராக மொஜ்தபா காமனெயி நியமிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், அரசு ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.
அதே நேரம் அந்தப் பேரணிக்கு பின்னால் பெரிய புகைமூட்டம் பரவிய காட்சிகள் வெளியாகின. உள்ளூர் ஆளுநர் அலுவலகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது தற்போதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், முன்னதாக இஸ்ரேல், தங்கள் படைகள் இஸ்ஃபஹான் மற்றும் பிற பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தி வந்ததாக தெரிவித்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு