காணொளி: கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் சிங்கம்
காணொளி: கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் சிங்கம்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் மாலியா வனப்பகுதிக்கு உட்பட்ட குக்ஸ்வாடா கிராமத்தில், ஒரு பெண் சிங்கம் கிணற்றில் தவறி விழுந்தது.
தோட்டத்தின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, அந்த சிங்கம் பாதுகாப்பாகக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
தற்போது, அது சிமர் பகுதியில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு கால்நடை மருத்துவர்கள் அதன் உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர்.
சிங்கம் முழுமையாக உடல்நலம் தேறிய பிறகு, மீண்டும் அதன் இயற்கையான வாழ்விடத்தில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



