காணொளி: பிரதமர் மீது முட்டையை வீசிய எம்.பி. - கொசோவா நாடாளுமன்றத்தில் சலசலப்பு

காணொளிக் குறிப்பு,
காணொளி: பிரதமர் மீது முட்டையை வீசிய எம்.பி. - கொசோவா நாடாளுமன்றத்தில் சலசலப்பு
பிரசுரிக்கப்பட்டது

ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, நாடாளுமன்ற அவைத் தலைவர் வேட்பாளரை அறிவிக்க மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று குர்ட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது, எதிர்க்கட்சி எம்.பி டைம் கத்ரிஜாஜ் தனது கைப்பையில் இருந்து முட்டைகளை எடுத்து, "வெட்கக்கேடு, வெட்கக்கேடு" என்று கத்தியபடி குர்ட்டியை நோக்கி வீசினார்.

இதையடுத்து, குர்ட்டியின் கட்சி எம்.பிக்களும் போலீசாரும் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு