You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "காஸாவை விட்டு வெளியேறுங்கள்" - மக்களை எச்சரித்த நெதன்யாகு
காஸாவை விட்டு மக்கள் வெளியேறுமாறு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், "காஸாவில் உள்ள பயங்கரவாத நிலைகளை அழிப்போம் என சில நாட்களுக்கு முன்பு உங்களிடம் நான் வாக்குறுதி அளித்தேன். அதைத்தான் இப்போது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். கடந்த சில நாட்களில், அத்தகைய 50 நிலைகளை விமானப்படை தகர்த்துள்ளது. இவை வெறும் தொடக்கமே, இனிமேல்தான் முக்கிய நடவடிக்கைகள் உள்ளன. உங்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இப்போதே வெளியேறுங்கள். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இது கடினமான நாள். பேருந்துக்குள் இரு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 குடிமக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்களுக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்." என தெரிவித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு