ராணா நாயுடு வெப்சீரிஸில் 'அதிக ஆபாசம்'; மன்னிப்புக் கேட்ட பாகுபலி நடிகர்

'ராணா நாயுடு' வெப்சீரிஸ் ஆபாசமா?

பட மூலாதாரம், TWITTER/Venkatesh Daggubati

பிரசுரிக்கப்பட்டது

ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ள ராணா நாயுடு தொடர் ஆபாசமாக இருப்பதாக குற்றம்சாட்டும் நெட்டிசன்கள், அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களான வெங்கடேஷ், ராணா டக்குபதி ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதையடுத்து, ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக நெட்டிசன்கள் பலருக்கும் ராணா டக்குபதி தனித்தனியாக விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் ஹிட்டடித்த 'ரே டோனொவன்' தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட 'ராணா நாயுடு' இணையத் தொடர் அண்மையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தெலுங்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழும் வெங்கடேஷூம், பாகுபலி படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ராணா டக்குபதியும் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. தொடர் மீது எதிர்மறையான விமர்சனங்களை முன்வைக்கும் பலரும், அதில் நிறைந்துள்ள ஆபாசக் காட்சிகளையும், பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் சரளமாக பயன்படுத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, தாங்கள் பெரிதாக மதிக்கும் நடிகர்களான வெங்கடேஷூம், ராணா டக்குபதியும் இதுபோன்ற இணைய தொடரில் நடித்திருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்பது நெட்டிசன்கள் பலரின் ஆதங்கம்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

தெலுங்கில் குடும்பம், சென்டிமென்ட் நிறைந்த திரைப்படங்களைக் கொடுத்து பெண் ரசிகைகளை அதிகம் கொண்ட வெங்கடேஷை இப்படிப்பட்ட ஒரு தொடரில் பார்ப்பதை நம்பவே முடியவில்லை என்று சிலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

வெங்கடேஷ் நடித்திருக்கிறார் என்பதாலேயே குடும்பத்துடன் தொடரை பார்க்க அமர்ந்தால் ஏமாற்றமே மிஞ்சியதாக அவர்கள் பதிவிட்டுள்ளனர். ராணா நாயுடு தொடரின் தமிழ்ப் பதிப்பு இன்னும் மோசமாக இருப்பதாகவும், சென்சார் போர்டு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் கேட்டு ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

இதேபோல், பாகுபலி மூலம் நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் வெகுவாக பிரபலமான ராணா டக்குபதியையும் நெட்டிசன்கள் பலரும் கண்டித்துள்ளனர். அதிலும், நடிகர் ராணா டக்குபதி தமது ட்விட்டர் பக்கத்தில், 'ராணா டக்குபதி' இணைய தொடரை ஃபேமிலி டிராமா என்று குறிப்பிட்டிருப்பதை அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதையடுத்து, 'ராணா நாயுடு' தொடர் பிடிக்கவில்லை என்று விமர்சிப்பவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக நடிகர் ராணா டக்குபதி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நெட்டிசன் ஒருவரின் மீம்சை பகிர்ந்து, "இது ஏ சான்றிதழ் பெற்ற 18 பிளஸ் தொடர். கண்டிப்பாக தனியாக பாருங்கள்" என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

அதேநேரத்தில், ராணா நாயுடு தொடரை ஆதரிக்கும் பதிவுகளையும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'எல்லா தொடரையும் குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு தொடரை மதிப்பிடுவதற்கான மோசமான அளவுகோல் இது.' என்ற நெட்டிசன் ஒருவரின் பதிவை ரீட்வீட் செய்து அது சரிதான் என்று ராணா டக்குபதி குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

"இந்த தொடரை தனியாக பாருங்கள். இந்த வார இறுதியில் சிறப்பான அனுபவம்" என்று குறிப்பிட்ட ட்வீட்டை பகிர்ந்துள்ள ராணா டக்குபதி, என்னுடைய வேண்டுகோளும் அதுதான் என்று கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 5

ராணா நாயுடு தொடரை ஆதரிக்கும், பாராட்டும் பல ட்வீட்களையும் ராணா டக்குபதி தமது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேநேரத்தில், நடிகர் வெங்கடேஷின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராணா நாயுடு தொடரை பிரபலப்படுத்துவதற்கான பதிவுகள் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: