You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வரிப் பகிர்வும் தொகுதி மறுவரையறையும் பெரிய பிரச்னையாக மாறும் - பிபிசிக்கு ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேட்டி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிதிநிலை அறிக்கை அறிக்கை குறித்த தன்னுடைய கருத்துகளை காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்தவரும் பொருளாதார நிபுணருமான ஆனந்த் ஸ்ரீனிவாசன் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்
"இதற்கு முன்பு இருந்த அரசுக்கு மாணவர்களுக்கு காலை உணவு அளிக்க, 1000 ரூபாய் உதவித் தொகை அளிக்க மனமில்லாமல் இருந்தது. ஆனால் இந்த அரசுக்கு அத்தகைய மனம் உள்ளது என்பது பட்ஜெட் மூலம் தெரிகிறது" என்கிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
தொடர்ந்து பேசிய அவர், "எத்தகைய சூழ்நிலையில் இந்த பட்ஜெட் வெளிவந்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். கேரளா, தமிழ்நாடு போன்ற தென்மாநிலங்களுக்கு தொடர்ந்து நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. இரண்டு பெரிய வெள்ளங்களை சந்தித்த தமிழ்நாட்டிற்கு மத்தியில் இருந்து எந்த நிவாரணமும் வரவில்லை. சில நாட்கள் தலைநகரம் சென்னை ஸ்தம்பித்து விட்டது.
மீண்டும் சில நாட்களில் தென்மாவட்டங்களில் வெள்ளம். இதனால் ஜிஎஸ்டி வசூல் வெகுவாக பாதித்தது. மேலும் பல நஷ்டங்கள் மாநிலத்திற்கு. தமிழ்நாட்டின் கடன் சுமையும் ஏறிவிட்டது" என்று கூறினார்.
மத்திய வரிப் பகிர்வும், தொகுதி மறுவரையறையும் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.
முழு பேட்டி காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)