காணொளி: இந்தியா - பாகிஸ்தான் மோதல் நின்றது எப்படி? - டிரம்ப் சொன்ன விளக்கம்

காணொளிக் குறிப்பு, "எச்சரித்த 5 மணி நேரத்துக்குள் இந்தியா - பாகிஸ்தான் மோதல் நின்றது" -டிரம்ப்
காணொளி: இந்தியா - பாகிஸ்தான் மோதல் நின்றது எப்படி? - டிரம்ப் சொன்ன விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து அவர் பேசினார்.

"இந்தியா – பாகிஸ்தான் மோதலை நான் தடுத்திருக்காவிட்டால் அவர்களுக்கிடையே அணு ஆயுத போர் நடந்திருக்கும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "மோதியிடம் பேசினேன், பாகிஸ்தானுடன் உங்களுக்கு என்ன பிரச்னை? என கேட்டேன். பிறகு பாகிஸ்தானுடன் வர்த்தகத்தைப் பற்றி பேசினேன். "இந்தியாவுடன் உங்களுக்கு என்ன பிரச்னை? என கேட்டேன்." என்றார்.

"பின் உங்களுடன் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்போவதில்லை அல்லது மிக அதிக வரி விதிக்கப்படும் என்றேன்" எனக் கூறினார். மேலும் மீண்டும் மோதல் தொடங்கலாம். அப்படி நடந்தாலும் அதையும் தடுத்து நிறுத்துவேன்" என்றார்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு