You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிலநடுக்கம் : பேரிடர்களில் இருந்து ஜப்பான் சட்டென மீள்வது எப்படி?
கடந்த 100 ஆண்டுகளாக நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை சந்தித்து வரும் ஜப்பான், அதனால் ஏற்படும் சேதங்களிலிருந்து பாடங்கள் கற்று, விரைவாக மீள கற்றுக் கொண்டுள்ளது.
ஜப்பானில் 1923ம் ஆண்டு ரிக்டர் அளவுகோலில் 5 வரை பதிவாகிய நிலநடுக்கம் பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. கட்டடங்கள் தரை மட்டமாகின. ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்தனர். நகரமே அழிந்து போனது. 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் அதே அளவிலான தாக்கத்தை கொண்டதானாலும், கட்டடங்கள் அசைந்தன, ஆனால் இடியவில்லை. உயிரிழந்தவர்களில் பலர் சுனாமியில் சிக்கியே உயிரிழந்தனர், நிலநடுக்கத்தால் அல்ல.
ஒவ்வொரு நிலநடுக்கத்தின் போது அதன் சேதங்கள் ஆய்வு செய்யப்பட்டு பாடங்கள் கற்றுக் கொள்ளப்படுகின்றன. இரும்பு, கான்கிரீட் கட்டுமானங்கள், மர கட்டுமானங்கள் தடிமனாக இருப்பது போன்ற மாற்றங்கள் ஜப்பானில் செய்யப்பட்டுள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)