குப்பையில் கிடக்கும் செருப்பை சித்திரமாக்கும் ஆப்பிரிக்க இளைஞர் - காணொளி
குப்பையில் கிடக்கும் செருப்பை சித்திரமாக்கும் ஆப்பிரிக்க இளைஞர் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
குப்பையில் தூக்கி எறியப்பட்ட செருப்புகளை வண்ணமயமான கலைப் படைப்பாக மாற்றுகிறார் நைஜீரியாவைச் சேர்ந்த கோம்பாய் யூஜின்.
பழைய செருப்புகளை மறுசுழற்சி செய்து அதை அழகிய படங்களாக மாற்றி பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு செய்கிறார் இவர்.
ஆண்டுதோறும் 25 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் நைஜீரியாவில் உருவாகின்றன. அதில் 2 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கிறது.
உலகம் முழுவதும் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கிறது என்று ஐ.நா கூறுகிறது.
இந்த எண்ணிக்கை 2040இல் மூன்று மடங்காக உயரும் என கூறப்படும் நிலையில், பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செருப்புகளை சித்திரமாக்கும் இந்த இளைஞரை பலரும் பாராட்டுகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



