ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் - 150 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் - 150 பேர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 150 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தாலிபன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமான கனமழை பெய்தது. பாக்லான் மாகாணத்தில் 130 பேரும், டக்ஹார் மாகாணத்தில் 20 பேரும் உயிரிழந்தனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தானும் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)