You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எவரெஸ்டில் உணவு, குடிநீரின்றி 6 நாள் தாக்குப் பிடித்து உயிருடன் மீண்டு வந்த நபர்
காணொளி: எவரெஸ்டில் உணவு, குடிநீரின்றி 6 நாள் தாக்குப் பிடித்து உயிருடன் மீண்டு வந்த நபர்
பிரசுரிக்கப்பட்டது
உணவு, தண்ணீர், ஆக்சிஜன் ஏதுமின்றி உயிர் பிழைத்த தாவா ஷெர்பா, மலையில் இருந்து தவழ்ந்து கீழிறங்கி வருவதைச் சிலர் பார்த்தனர்.
மே 29 அன்று, உடன் சென்றிருந்த மலையேற்றக் குழுவை அவர் தவறவிட்டார். அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் உயிர் பிழைக்க பனிக்கட்டியை சாப்பிட்டதாக அவர் கூறினார்.
ஜூன் 4ஆம் தேதி, பேஸ் கேம்புக்கு (Base Camp) சற்று மேலே இருக்கும் பனிச்சரிவுப் பகுதியில், தூய்மைப் பணியாளர்கள் தாவாவை கண்டனர்.
அவர் இப்போது நலமாக உள்ளார், கடும் குளிரால் ஏற்படும் திசுப் பாதிப்பு, நீர்ச்சத்து இழப்பு, அதிர்ச்சி ஆகியவற்றுக்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு