You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வயநாட்டில் மிகத்துரிதமாகப் பாலத்தைக் கட்டி முடித்த இந்திய ராணுவம்- மெட்ராஸ் என்ஜினியரிங் குழுவின் பங்கு என்ன?
இந்திய ராணுவத்தினர் கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு நடந்த இடத்தில் மிகத் துரிதமாக ஒரு பாலத்தைக் கட்டி முடித்திருக்கின்றனர். நிலச்சரிவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட முண்டக்கை கிராமத்திற்குச் செல்ல அவர்கள் இந்தப் பாலத்தைக் கட்டியுள்ளனர்.
இந்தப் பாலம் இவ்வளவு குறுகிய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது, நாடு முழுதும் பேசுபொருளாகியிருக்கிறது. இப்பாலம் இருவாஞ்சிப்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.
மலைமுகட்டிலிருந்து சரிந்துவந்த மண் திரள், பாறைகள் ஆகியவை சூரல்மலை மற்றும் முண்டகை கிராமங்களுக்கு இடையில் இருந்த பாலத்தை முற்றிலுமாகச் சிதைத்தது. இதனால் முண்டகை கிராமம் துண்டிக்கப் பட்டது. நிவாரணப் பணியாளர்களால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவ அவ்விடத்தை அடைய முடியவில்லை.
இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் அவ்விடத்தில் 24-க்ளாஸ் பாலத்தைக் அமைத்தனர். அதாவது இப்பாலம் இரும்பால் கட்டப்பட்டது. இது 24 டன் அளவி எடையைத் தாங்கும்.
இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் என்ஜினியரிங் குழுவும், பொறியியல் பணிக்குழுவும் சேர்ந்து இந்த இரும்புப் பாலத்தைக் கட்டிமுடித்தனர். முதலில் முண்டகைக்குச் செல்ல, ஒரு மரப்பாலத்தைக் கட்டினர். அதற்குப்பின் கட்டப்பட்ட இரும்புப் பாலத்தில் வாகனங்களும் சென்று வரலாம்.
தயாரிப்பு : பல்லா சதீஷ், பிபிசி தெலுங்கு
ஒளிப்பதிவு: சோனி அப்பையா, பிபிசி தெலுங்குக்காக
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)