காணொளி: தர்மசங்கடம் ஏற்படுத்தும் டிரம்பின் பேச்சு - என்ன செய்வார் மோதி?

காணொளி: தர்மசங்கடம் ஏற்படுத்தும் டிரம்பின் பேச்சு - என்ன செய்வார் மோதி?
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கப்போவதில்லை என இந்திய பிரதமர் மோதி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து இந்தியாவில் பேசுபொருளாகி உள்ளது. அதோடு பிரதமர் மோதி மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்தியா தொடர்புடைய கொள்கை மாற்றங்களை டிரம்ப் அறிவிக்கிறாரா என்கிற ரீதியிலும் பல்வேறு தரப்புகளிலிருந்து கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எனக்குத் தெரிந்தவரை மோதி மற்றும் டிரம்ப் இடையே எந்த உரையாடலும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.

ஆனால், அதன் பிறகு வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காது என மீண்டும் கூறினார்.

டிரம்ப் பொய் சொல்கிறார் என்றோ ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது குறித்து இந்தியா அவருக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றோ இந்தியா இதுவரை நேரடியாக கூறவில்லை.

டிரம்பின் பேச்சை மேற்கோள்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் கன்வல் சிபல், "இது தான் டிரம்பை கையாள்வதில் உள்ள பிரச்னை. அவர் தவறாக வழிநடத்துகிறார். உரையாடல்களுக்கு தனது சொந்த சுயநல விளக்கத்தை அளிக்கிறார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு