ஹமாஸ் வசம் உள்ள பணயக்கைதிகள் பற்றி நெதன்யாகு கூறியது என்ன?

ஹமாஸ் வசம் உள்ள பணயக்கைதிகள் பற்றி நெதன்யாகு கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நெதன்யாகு உரையின் சாராம்சம்:

"அன்புள்ள இஸ்ரேலிய குடிமக்களே, உங்களை போலவே நானும் கோபமடைந்தேன். நம் அன்பு மகன்களான ரோம், எவியதாரின் கொடூர வீடியோக்களை பார்த்தேன். அவர்களின் குடும்பத்தை தொடர்பு கொண்டு, என் சார்பாகவும், என் மனைவி சார்பாகவும், உங்கள் சார்பாகவும் ஆறுதல் கூறினேன்."

"அவர்கள் சுரங்கச் சிறையில் வாடுகிறார்கள். ஆனால் அவர்களைச் சுற்றியுள்ள ஹமாஸ் அரக்கர்கள் பலமாக உள்ளனர். அவர்களிடம் சாப்பிட தேவையான எல்லாம் உள்ளன. ஆனால், நாஜிக்கள் யூதர்களை பட்டினி போட்டது போல இவர்களை பட்டினி போட்டிருக்கிறார்கள்."

"இதை பார்க்கும்போது, ஹமாஸ் என்ன விரும்புகிறது என்பது எனக்கு தெளிவாகப் புரிகிறது. அவர்கள் ஒப்பந்தத்தை விரும்பவில்லை. இது போன்ற கொடூர வீடியோக்கள் மூலமும், அவர்கள் உலகில் பரப்பும் இது போன்ற தவறான பிரசாரம் மூலமும் நம்மை உடைக்க விரும்புகிறார்கள். ஆனால் நாம் உடைந்து போக மாட்டோம். நம் பணயக்கைதிகளை விடுவிக்கவும், ஹமாஸை ஒழிக்கவும், காஸா இனி இஸ்ரேல் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தவும் கூடுதல் உறுதியுடன் உள்ளேன்."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு