You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் ஆளும் கட்சி'- பரந்தூரில் திமுக அரசை விமர்சித்த தவெக தலைவர், நடிகர் விஜய்
நடிகர் விஜயின் 'தமிழக வெற்றிக் கழகத்தின்' முதல் மாநாடு கடந்த வருடம், அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றபோது, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் இன்று (ஜனவரி 20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்துப் பேசியுள்ளார்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்ததையும், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்ததையும் சுட்டிக்காட்டிய நடிகர் விஜய், "எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா?" என்று விமர்சித்தார்.
"விவசாய நிலங்கள் இல்லாத, பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடமாகப் பார்த்து விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும். நானும், தவெக-வினரும், சட்டத்துக்குட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுடன் உறுதியாக நிற்போம்" என்று பேசினார் நடிகர் விஜய்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)