You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'இரானின் புதிய அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி காயம்' - அமெரிக்கா
இரானின் புதிய அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி காயமடைந்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சேத் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "புதிதாக 'அதி உயர் தலைவர்’ என அழைக்கப்படுபவர் காயமடைந்துள்ளார். அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். பலவீனமானதாக இருந்தது. அதில் குரல், வீடியோ இல்லை. எழுத்துப் பூர்வ அறிக்கை.
அவர் ஒற்றுமைக்காக அழைப்பு விடுத்தார். ஆனால் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கொல்வதே அவருடைய ஒற்றுமை. இரானில் கேமராக்களும், குரல் பதிவு செய்யும் சாதனங்களும் போதுமான அளவில் உள்ளன. பிறகு ஏன் எழுத்துப்பூர்வ அறிக்கை? அதற்கான காரணம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அவர் தந்தை இறந்துவிட்டார். அவர் பயத்தில் இருக்கிறார், காயமடைந்துள்ளார், ஒளிந்து திரிகிறார். அவருக்கு சட்டபூர்வ அதிகாரமும் இல்லை. அவர்களுக்குள் நிலைமை குழப்பமாக உள்ளது. இப்போது பொறுப்பில் இருப்பது யார்? இரானுக்கே கூட அது தெரியாமல் இருக்கலாம்." என்று கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு