You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு
வங்கதேசத்தில் 2024-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தை வன்முறை கொண்டு ஒடுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்தாண்டு வங்கதேசத்தில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் 1400 பேர் வரை இறந்தனர் என ஐநா கணக்கிட்டுள்ளது.
மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறையின் முன்னாள் தலைவர் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
தனக்கு எதிரான தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே டாக்காவில் உள்ள ஹசீனாவின் வீட்டுக்கு வெளியே புல்டோசர் உடன் போராட்டக்காரர்கள் கூடினர்.
கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் விளைவால் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து தப்பித்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்ட உடன் நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சிலர் தண்டனையை வரவேற்று கோஷங்கள் எழுப்பினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு