காணொளி: H-1B விசா கட்டண உயர்வு யாருக்கு? வெள்ளை மாளிகையின் விளக்கம் என்ன?

காணொளி: H-1B விசா கட்டண உயர்வு யாருக்கு? வெள்ளை மாளிகையின் விளக்கம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

H-1B விசாவுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்துள்ள புதிய நடைமுறை பல குழப்பங்களையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

H-1B விசாவுக்கான புதிய விதிமுறைகள் கொண்ட கோப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டார். இது செப்டம்பர் 21, 2025 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, H-1B விசாவுக்கான கட்டணம் 1,500 டாலராக இருந்தது. இனி H-1B விசா பெற அமெரிக்க அரசுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறி இருந்தார். இது தொடர்பாக பல விவாதம் எழுந்த நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை இந்த கட்டணம் ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் என கூறி உள்ளது.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.