You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன. அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், 'ஈபிஎஸ் வசமானது அதிமுக; ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு - உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரம், ஆளுநர் ரவி பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்? பைடனின் ரகசிய பயணம் சாத்தியமானது எப்படி?, தோனி பாணியில் ரன் அவுட்டான ஹர்மன்ப்ரீத்; கானல் நீரான இந்தியாவின் உலக கோப்பை கனவு, மயில்சாமி: கிருபானந்த வாரியார் முதல் காமெடி டைம் வரை என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
ஈபிஎஸ் வசமானது அதிமுக; ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு - உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரம்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்கள். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. லிங்கை க்ளிக் செய்து முழுமையாக அறியவும்.
மார்க்சியம், டார்வினியம் என்பது என்ன? ஆளுநர் ரவி பேச்சுக்கு எதிர்ப்பு ஏன்?
உலக அரசியல் பொருளியல் வரலாற்றைப் புரட்டிய கார்ல் மார்க்சின் கருத்தியல், உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விளக்கி அறிவியல் உலகைத் திருப்பிப் போட்ட சார்லஸ் டார்வினின் கோட்பாடு போன்ற மேற்கத்திய கருத்துகள் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதித்ததாக, ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார் என்று வெளியான செய்தி தமிழ்நாட்டில் ஒரு பரபரப்பான அரசியல் விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. விரிவாக அறிய லிங்கை க்ளிக் செய்யவும்.
செல்போன் இல்லாமல் ரயிலில் 10 மணிநேரம் - பைடனின் ரகசிய பயணம் சாத்தியமானது எப்படி?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தினந்தோறும் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க் களத்திற்கு சென்ற ஜோ பைடனின் இந்த பயணம் நவீன காலத்தில் ‘அபூர்வமானது’ என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது எப்படி சாத்தியமானது? விவரம் அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
T20 மகளிர் WC: தோனி பாணியில் ரன் அவுட்டான ஹர்மன்ப்ரீத்; கானல் நீரான இந்தியாவின் உலக கோப்பை கனவு
மகளிர் டி20 உலக கோப்பை கனவு இந்திய அணிக்கு இந்த முறையும் நனவாகவில்லை.
விறுவிறுப்பான அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது இந்திய அணி. 2019 உலக கோப்பை அரையிறுதியில் தோனி ரன் அவுட்டானது பலருக்கும் நினைவில் இருக்கலாம். அதே பாணியில் ஹர்மன் ப்ரீத் கவுர் ரன் அவுட்டானது ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக புரட்டிப் போட்டது. என்ன நடந்தது? விவரம் அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
மயில்சாமி: கிருபானந்த வாரியார் முதல் காமெடி டைம் வரை
மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி, 1980களில் இருந்து தமிழ் நகைச்சுவை ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர். தமிழ்த் திரையில் மிக அரிதாகக் காணக்கிடைக்கும் இயல்பான நகைச்சுவைக்குச் சொந்தக்காரர். முழு விவரம் அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்