You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலிய புயலில்117 ரன்னில் சாய்ந்த இந்தியா: 11 ஓவரில் அடித்து தூக்கிய ஆஸி.
ஆஸ்திரேலிய புயலில்117 ரன்னில் சாய்ந்த இந்தியா: 11 ஓவரில் அடித்து தூக்கிய ஆஸி.
பிரசுரிக்கப்பட்டது
விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானது.
இதையடுத்து பேட்டிங் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பு ஏதுமின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றிக் கோட்டைத் தொட்டது.
ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 66 ரன் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இருவருமே அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்