சாவர்க்கர் குறித்த கருத்துக்காக ராகுல் காந்திக்கு எதிராக புகாரளித்த சாவர்க்கர் பேரன் – இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு

பட மூலாதாரம், ANI
நவம்பர் 15ஆம் தேதியன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிர்சா முண்டா குறித்துப் பேசும்போது சாவர்க்கரைப் பற்றி அவர் தெரிவித்த கருத்துகளுக்காக பாஜக தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. மும்பையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, சாவர்க்கரின் பேரனும் ராகுல் காந்தி மீது புகாரளித்துள்ளார்.
ராகுல் காந்தி அவருடைய பாரத் ஜோடோ யாத்திரையின்போது, முண்டா பழங்குடியினத்தைச் சேர்ந்த போராளியான பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படும் ஜஞ்சத்ய கௌரவ் திவாஸின்போது மகாராஷ்டிராவில் நடந்த ஒரு பழங்குடியின மாநாட்டில் பேசினார். அப்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவிக்கவே, பாஜக தரப்பில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுல் காந்தி வீர சாவர்க்கரை அவதூறாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மீது மும்பையிலுள்ள தானே நகர் காவல் நிலையத்தில், அதைத் ஐபிசி 500, 501 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பழங்குடியின மாநாட்டில் என்ன பேசினார்?
ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பழங்குடியின மாநாட்டில் பேசியபோது, “பிர்சா முண்டா பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினார். அவருக்கு 24 வயதாக இருக்கும்போதே பிரிட்டிஷ் அரசு அவரைக் கொலை செய்தது. அந்த 24 ஆண்டுகளில் அவர் அனைத்தையும் செய்தார். பிர்சா முண்டாவின் சித்தாந்தம் ஆர்எஸ்எஸ், பாஜகவால் தாக்கப்படுகிறது.
‘ஆதிவாசி’ என்பதை ‘வனவாசி’ என்று மாற்றியதன் பின்னணியில், அவர்களுக்கு ஆழமான வியூகம் உள்ளது. அதை வைத்து அவர்கள் பலருடைய உரிமைகளைப் பறித்துள்ளனர்.
அரசமைப்புச் சட்டம், காங்கிரஸ் ஆட்சியின்கீழ் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழுவால் எழுதப்பட்டது. அந்த நேரத்தில் பாஜக நமக்கு அரசமைப்புச் சட்டமே தேவையில்லை எனக் கூறியது. இப்போது அரசமைப்பு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறது,” என்று பேசினார்.
பாஜக தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்திய வண்ணம் உள்ளது எனப் பேசியவர், இந்துத்துவ சித்தாந்தவாதியான வி.டி.சாவர்க்கர் பிரிட்டீசாரிடம் பென்ஷன் பெற்றுக்கொண்டு காங்கிரஸுக்கு எதிராகச் செயல்பட்டார் என்றும் கூறினார்.

பட மூலாதாரம், ANI
அதுகுறித்துப் பேசியபோது, “அந்தமான் சிறையில், சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கடிதம் எழுதி தன்னை மன்னிக்குமாறும் விடுவிக்குமாறும் கேட்டார். வீர சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து பென்ஷன் பெற்றுக்கொண்டு காங்கிரஸுக்கு எதிராகச் செயல்பட்டார்.
சிறையிலிருந்து வெளியேறிய பிறகு அவர் பிரிட்டீஷாரின் முன்மொழிதலை ஏற்று, அவர்களுடைய படையில் சேர்ந்தார். பிர்சா முண்டா 24 வயதிலேயே பிரிட்டிசாருக்கு எதிராகப் போராடினார் என்பதே அவருக்கும் சாவர்க்கருக்கும் இருக்கும் வேறுபாடு,” என்றார்.
சூடுபிடித்த அரசியல் களம்
சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் இந்தப் பேச்சால் இந்திய அரசியல் சூடு பிடித்துள்ளது. பாஜக தலைவர்கள் ராகுல் காந்தி மீது கேள்விகளை முன்வைத்துவரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ராகுல் கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்து ஒதுங்கிக் கொண்டார்.
சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு மகாராஷ்டிர மக்கள் பதில் அளிப்பார்கள் என்று அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
சாவர்க்கரை பற்றிய ராகுல் காந்தியின் கருத்து மற்றும் நடத்தைக்கு மகாராஷ்டிர மக்கள் பதிலளிப்பார்கள் என்று கூறியவர், “சுதந்திரத்திற்கு முன்பு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நாட்டின் ஒரே தலைவர் சாவர்க்கர் மட்டுமே. சுதந்திரத்திற்குப் பிறகு அவர் பட்டினி சிறைவாசத்தை அனுபவித்தார். அவர் அனுபவித்ததைப் போன்ற இன்னும் பல கொடுமைகளை அனுபவித்தவர் வேறு யாரும் இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
பாரத் ஜோடோ யாத்திரை மகாராஷ்டிராவை அடைந்தபோது, சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரேவும் ராகுலுடன் இணைந்துகொண்டார். தேவேந்திர பட்னாவிஸ், அவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தியைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இந்துத்துவ சித்தாந்தவாதிகளை அவமதிப்பதை மாநில மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.
பாஜகவின் மகாராஷ்டிர பிரிவு உத்தவ் தாக்கரே மீதும் கேள்விகளை எழுப்பியது. “உத்தவ் தாக்கரே, நீங்கள் ராகுல் காந்தியைக் கட்டிப்பிடித்தப்படி வந்தீர்கள். உங்களிடம் எது இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது?” என்று ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டது.
அதுபோக, நேருவைப் பற்றியும் அவரை ‘மாஃபிவீர்’ என்று அழைத்தும் பல ட்வீட்களை பாஜக பதிவிட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ராகுல் காந்தி காட்டிய சாவர்க்கரின் கடிதம்
சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து அரசியல் சர்ச்சையை எழுப்பவே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதற்குப் பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் இந்தப் பிரச்னையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
அவர், “வீர் சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. வீர் சாவர்க்கருக்கு எங்கள் இதயத்தில் மரியாதை உள்ளது. அவரது பங்களிப்பை யாராலும் அழிக்க முடியாது. சாவர்க்கரை பற்றி பாஜகவும் ஆர்எஸ்எஸும் பேசும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. சாவர்க்கரைப் பற்றிப் பேச அவர்களுக்கு உரிமை இல்லை.
மேலும், “வீர் சாவர்க்கரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், நீங்கள் எங்களிடம் கேள்வி கேட்கும்போது, ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் ஏன் கூட்டணியில் இருந்தது என்பதையும் பாஜக சொல்ல வேண்டும். மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருபோதும் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லாது,” எனக் கூறினார்.

பட மூலாதாரம், ANI
சாவர்க்கர் குறித்துப் பேசிய ராகுல் காந்தி பலரின் விமர்சனங்களுக்கு உள்ளானார். வியாழக்கிழமை பாரத் ஜோடோ யாத்திரையின்போது செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது இது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது, உத்தவ் தாக்கரேவின் கருத்து வேறுபாடு மற்றும் பாஜக எழுப்பும் கேள்விகள் குறித்துக் கேட்டபோது, ராகுல் காந்தி ஒரு காகிதத்தைக் காட்டி “இது எனக்கு மிக முக்கியமான ஆவணம். ஆங்கிலேயர்களுக்கு சாவர்க்கர்ஜி எழுதிய கடிதம் இது. அவருடைய கடைசி வரி, ‘ஐயா நான் உங்கள் வேலைக்காரனாக இருக்க விரும்புகிறேன். வி.டி.சாவர்க்கர்.” எனக் கூறினார்.
மேலும், “இதை நான் எழுதவில்லை. சாவர்க்கர்ஜி எழுதியுள்ளார். நீங்கள் இதைப் பாருங்கள், படியுங்கள். பட்னாவிஸ்ஜியும் இதைப் பார்க்க விரும்பினால், அவரும் பார்க்க வேண்டும். இதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். சாவர்க்கர்ஜி ஆங்கிலேயர்களுக்கு உதவினார்,” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
புகார் அளித்த சாவர்க்கரின் பேரன்
ராகுல் காந்தியின் இந்தக் கருத்தால் கோபமடைந்த வீர் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மும்பையிலுள்ள சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முதல் தகவல் அறிக்கையில், ராகுல் காந்தி தேசத் தலைவரை அவமதித்துள்ளதாகவும் அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்த அவருடைய ட்வீட்டில், “சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை அவமதித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் கைது செய்யக் கோரி அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4

X பதிவின் முடிவு, 5
ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, நேரு தொடர்பாகப் பேசினார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், “காங்கிரஸ் வணங்கும் ஜவஹர்லால் நேரு, இரண்டு வாரங்கள் கூட நபா சிறையின் கஷ்டங்களைத் தாங்க முடியாமல் தனது தந்தையால் (செப்டம்பர் 1923இல்) காப்பாற்றப்பட்டார். அவருடைய தந்தை மோதிலால் நேரு, தனது மகன் விடுதலைக்காக ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். நேரு ஒரு கோழை. ஆகவே, முதலில் உங்கள் தரப்பைப் பாருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தின் முலுக் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சித்தக்கா என்ற தனாசாரி அனசுயா தனது ட்விட்டர் பக்கத்தில், “மாஃபிவீர் சாவர்க்கர் மிகவும் துணிச்சலானவர். ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதி, ஐயா நான் உங்கள் வேலைக்காரனாக இருக்க விரும்புகிறேன் எனக் கூறினார். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு 60 ரூபாய் ஓய்வூதியமும் வழங்கினர்,” என்று பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்