இந்தியா ரூ.33,000 கோடிக்கு வாங்கும் அமெரிக்க ட்ரோன்கள் - அதன் சிறப்புகள் என்ன?

இந்தியா ரூ.33,000 கோடிக்கு வாங்கும் அமெரிக்க ட்ரோன்கள் - அதன் சிறப்புகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவுக்கு 31 MQ-9B ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்களுடன் கூடவே அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களும் விற்கப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

சுமார் 4 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுக்கள் நடந்து வந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

ராணுவ பயன்பாட்டிற்காக இத்தகைய ஆளில்லா விமானங்களை வாங்குவது பற்றி இந்தியா 2018இல் பேச்சுகளைத் தொடங்கியது. ஆனால் ஆயுதங்கள் இல்லாத ஆளில்லா விமானங்கள் மீது அதற்குப் பல காலம் முன்பே இந்தியா ஆர்வம் காட்டியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)