You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்காவில் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயரா?
எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் பிரதமர் மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என்று வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார்.
காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், மோதி தன்னிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு இஸ்ரேலுக்குச் சென்றதாகவும், அங்கு அமெரிக்க அதிபரின் நலனுக்காக ஆடிப் பாடியதாகவும் எப்ஸ்டீன் தெளிவாகக் கூறுவதாக, எப்ஸ்டீன் ஆவணங்களை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது.
"நரேந்திர மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன வகையான ஆலோசனைகளைப் பெற்றார்? அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்த வகையில் பயன் பெற மோதி இஸ்ரேலில் ஆடிப்பாடினார்? 'இது பலன் அளித்தது' என்று எப்ஸ்டீன் எழுதியுள்ளார். இதன் பொருள் என்ன?" ஆகிய 3 கேள்விகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. ஜூலை 2017-இல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்ரேல் பயணத்தைத் தவிர மின்னஞ்சலில் மீதமுள்ள தகவல்கள் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் வெற்றுப் பிதற்றல்களைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு