ரஷ்யா - யுக்ரேன் இடையே மீண்டும் உக்கிரமடையும் போர் - என்ன நடக்கிறது?
கடந்த இரு தினங்களாக ரஷ்யா- யுக்ரேன் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் வான்வழித் தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
பெரும்பாலான தாக்குதல்கள் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்டிருந்தாலும் தலைநகர் கீவ் அருகிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இரவு முழுவதும் ரஷ்யா ஏவிய 49 ட்ரோன்களில் 29 ட்ரோன்களை அழித்ததாக யுக்ரேனிய விமானப்படை கூறியுள்ளது.
வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், வாகனங்கள் போன்றவை இந்தத் தாக்குதலில் சேதமடைந்ததாக யுக்ரேனிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று நடந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளான டிசம்பர் 30ஆம் தேதி யுக்ரேன் பதில் தாக்குதலை நடத்தியது. ரஷ்ய எல்லையில் உள்ள பெல்ஹொரட் நகர் மீது யுக்ரேனிய படைகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தின. இதில், 3 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்தது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



