டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு புதின் எடுத்த முடிவு என்ன?

டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு புதின் எடுத்த முடிவு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யா - யுக்ரேன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முன் வைத்த 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிபர் புதினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், யுக்ரேனின் எரிசக்தி, உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை மட்டும் நிறுத்த புதின் ஒப்புக்கொண்டார்.

யுக்ரேனுக்கு ராணுவ உதவிகள் அளித்து வரும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் உதவிகளை நிறுத்தாவிட்டால் முழு போர் நிறுத்தம் சாத்தியமில்லை எனவும் புதின் தெரிவித்தார்.

அனைத்து எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு மீது உடனடி போர்நிறுத்தம் மேற்கொள்ள நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஒரு முழுமையான போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், இறுதியில், ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான இந்த பயங்கரமான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நாங்கள் விரைவாகச் செயல்படுவோம் என்று டிரம்ப் இந்தப் பேச்சுவார்த்தை பற்றித் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்ய அரசு ஊடகத்தின்படி, இருநாட்டு தலைவர்கள் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை 2 மணிநேரம் நீடித்தது.

எரிசக்தி உள்கட்டமைப்பை உள்ளடக்கிய ஒரு போர் நிறுத்துக்கு யுக்ரேன் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவதாகவும் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறினார்.

மேலும், யுக்ரேனின் சுமியில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், ரஷ்யா போர் நிறுத்தத்தை நிராகரித்துள்ளதாகவும் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, கடந்த வாராம் செளதி அரேபியாவில் அமெரிக்கா – யுக்ரேன் அதிகாரிகள் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ரஷ்யாவுடனான பேரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்கா பரிந்துரைத்த உடனடியாக அமலுக்கு வரும் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு யுக்ரேன் சம்மதித்தது.

இரு நாட்டு அதிபர்கள் இடையிலான பேச்சுவார்த்தையின் விளைவு என்ன? முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.