You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், ராகுலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சூரத் நீதிமன்றம், "உயிரே போனாலும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்" - போராட்டத்தில் மீனவ பெண்கள், அமெரிக்காவை விட்டு விலகி சீனாவை நெருங்குகிறதா செளதி? பட்டத்து இளவரசரின் கனவு என்ன?, மிஸ் இந்தியா நந்தினி: சிறிய நகரத்தில் விவசாயி மகளாக பிறந்து சாதித்தது எப்படி?, அஜிங்க்யா ரஹானே 2.0 : அற்புதம் நிகழ்த்தும் CSK 'சூப்பர் ஸ்டார்' என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
ராகுலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சூரத் நீதிமன்றம் - இனி என்ன நடக்கும்?
காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி மீது 2019ஆம் ஆண்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழமை (மாஜிஸ்திரேட்) நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சூரத் செஷன்ஸ் (அமர்வு) நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
இனி என்ன நடக்கும்? முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
"உயிரே போனாலும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்" - போராட்டத்தில் மீனவ பெண்கள்
“1984ல எம்ஜிஆர் துப்பாக்கி சூடு நடத்தவே உத்தரவு கொடுத்தாரு. அப்பவே எதிர்த்து நின்னு உயிரைத்தான் விட்டோமே தவிர, எங்க இடத்தை விட்டுக்கொடுக்கல. என்னவோ நாங்க இப்பதான் இங்க வந்த மாதிரி பேசுறாங்களே, உங்களுக்கு இந்த ரோடு என்ன சொந்தமானு கேட்குறாங்களே! ஆமா, இது எங்க ரோடுதான். நாங்க உயிரையேகூட விடுவோம், ஆனா இந்த மண் மீதான எங்க உரிமைய விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என்று சென்னையின் லூப் சாலையில் சாலையோர மீன் கடையை வைத்திருக்கும் முல்லைக்கொடி உணர்ச்சி பொங்கப் பேசினார்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அமெரிக்காவை விட்டு விலகி சீனாவை நெருங்குகிறதா செளதி? பட்டத்து இளவரசரின் கனவு என்ன?
2022 மார்ச் 10 ஆம் தேதி செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையில் தூதாண்மை உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த இரு நாடுகள் மீது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த உலக முறைமை மீதும் இந்த ஒப்பந்தத்தின் தாக்கம் இருக்கும்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
மிஸ் இந்தியா நந்தினி: சிறிய நகரத்தில் விவசாயி மகளாக பிறந்து சாதித்தது எப்படி?
”நந்தினி பத்தாம் வகுப்பில் இருந்தபோது, ’அம்மா, ஒருமுறையாவது மிஸ் இந்தியா மேடைக்குப் போக விரும்புகிறேன்’ என்று சொன்னார்.”
"அவர் படிப்பிலும் தன்னை நிரூபித்தார். அம்மா, நான் படிப்பிலும் நன்றாகவே இருக்கிறேன். நான் அங்கும் (மிஸ் இந்தியா மேடை) செல்ல விரும்புகிறேன் என்று கூறினார்."
ஃபெமினா மிஸ் இந்தியா-2023 பட்டத்தை வென்ற நந்தினி குப்தாவின் தாயார் ரேகா குப்தா, தனது மகளின் கனவை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். மகளின் அந்தக்கனவு இப்போது நனவாகியுள்ளது என்று அவர் பெருமிதப்படுகிறார்.
முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அஜிங்க்யா ரஹானே 2.0 : அற்புதம் நிகழ்த்தும் CSK 'சூப்பர் ஸ்டார்'
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கேட்ச்களை கோட்டை விட்டு, ஃபீல்டிங்கில் சொதப்பிக் கொண்டிருக்க ஒரு வீரர் மட்டும் ரசிகர்களிடம் 'வாவ்' பாராட்டு பெற்றார்.
அவர் அஜிங்க்ய ரஹானே. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்