You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கும் இரான் வெளியுறவு அமைச்சர்
ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கும் இரான் வெளியுறவு அமைச்சர்
பிரசுரிக்கப்பட்டது
இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷ்யாவுக்குச் சென்று அதிபர் புதினை சந்திக்க இருக்கிறார். அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசியவர், "நிச்சயமாக, ராஜ்ஜீய பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்திருக்க வேண்டும். இப்போது அப்படி இல்லை. என் நாடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சுய பாதுகாப்புகாக பதிலளிக்க வேண்டியுள்ளது. தேவைப்படும் வரை, அவசியமான வரை நாங்கள் அதை செய்வோம்."
"நான் இன்று மதியம் மாஸ்கோ செல்கிறேன், நாளை அதிபர் புதினை சந்திக்கிறேன். ரஷ்யா இரானின் நண்பன். இரு நாடுகளும் உறவு கொண்டுள்ளோம். நாங்கள் கலந்தாலோசித்து எங்கள் நிலைப்பாடுகளை ஒருங்கிணைக்கிறோம்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு