காணொளி: மதுரை அரசுப் பள்ளியில் பாடம் எடுக்கும் விஞ்ஞானி ‘ஐன்ஸ்டீன்’

காணொளிக் குறிப்பு, காணொளி: மதுரை அரசுப் பள்ளியில் பாடம் எடுக்கும் விஞ்ஞானி ‘ஐன்ஸ்டீன்’
காணொளி: மதுரை அரசுப் பள்ளியில் பாடம் எடுக்கும் விஞ்ஞானி ‘ஐன்ஸ்டீன்’
பிரசுரிக்கப்பட்டது

இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் முழு அளவிலான ஹோலோகிராம் உருவம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் காணொளி இது.

சுமார் மூன்று நிமிடங்கள் தோன்றிய ஐன்ஸ்டீனின் உருவம், தனது புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை மதுரை, அவனியாபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு எளிமையாக விளக்கியது.

ஹோலோகிராம் வகுப்பை மாணவர்கள் ஆர்வமுடன் கவனித்தனர் என்கிறார் ஆசிரியை சாரதா.

இந்த ஹோலோகிராம் அமைப்பை உருவாக்கியவர் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், பொறியாளருமான கார்த்திக் மாரி பிச்சை.

கடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் கும்பகோணத்தில் நடிகர் விஜயின் ஹோலோகிராம் உருவத்தை இவர் காட்சிப்படுத்தியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு