டிரம்ப் உடனான சந்திப்பு பற்றி மம்தானி கூறியது என்ன? - காணொளி

டிரம்ப் உடனான சந்திப்பு பற்றி மம்தானி கூறியது என்ன? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார்.

அந்தச் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்தவர் "அது ஒரு ஆக்கப்பூர்வமான சந்திப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். அப்போது வாழ்க்கைச் செலவுகளை பற்றி மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

அனைவரும் சில காலமாக கவனம் செலுத்தி வரும் விஷயங்களைப் பற்றிப் பேசினோம்.நாங்கள் ஒரு பயனுள்ள உறவை ஏற்படுத்தி வருகிறோம் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றார்.

அதோடு, "இந்த உறவு, அந்த சந்திப்பின் அடிப்படையில் உருவானது. இது மேலும் தொடரும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் இருவரும் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்த விரும்புகிறோம் என்பது பாராட்டுக்குரியது.

மேலும் எனது தலைமை ஊழியர்களுடன் ஓவல் அலுவலகத்திற்கு என்னை அழைத்ததற்கும், அமைச்சரவை அறையையும் சுற்றி காண்பித்தற்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு