காணொளி: கர்னூல் பேருந்து விபத்துடன் தொடர்புடைய பைக் - கடைசி காட்சிகள்

காணொளி: கர்னூல் பேருந்து விபத்துடன் தொடர்புடைய பைக் - கடைசி காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

கர்னூல் பேருந்து விபத்து தொடர்பாக தற்போது வீடியோ ஒன்று பரவி வருகிறது. பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சி இது.

அக்டோபர் 24-ஆம் தேதி நள்ளிரவு 2.20 மணியளவில் இரண்டு பேர் பைக்கில் இந்த பெட்ரோல் பங்கிற்குள் நுழைவதை பார்க்க முடிகிறது. பைக்கை ஓட்டி வந்த நபர் கீழே இறங்கி, பங்க் ஊழியர்களை சத்தமாக அழைக்கிறார்.

அங்கு ஊழியர்கள் யாரும் இல்லாததால் தனது கைகளாலேயே பைக்கை திருப்பி அங்கிருந்து செல்கிறார். அப்போது பைக் சற்று தடுமாறுகிறது. அந்த காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கர்னூல் மாவட்ட போலிசார் பிபிசியிடம் பேசுகையில், இது உண்மையான வீடியோ என்பதை உறுதி செய்தனர். பைக்கை ஓட்டிச் சென்றவர்தான் சிவ சங்கர் எனக் கூறினர். பெட்ரோல் பங்கில் இருந்து வெளியே வந்ததும் சிவ சங்கர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும், அவரின் பைக் பேருந்தால் இழுத்துச் செல்லப்பட்டு, தீ விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் கூறினர். மேலும், விசாரணை முடிந்த பிறகு முழு தகவலை அளிப்பதாக போலீசார் கூறினர்.

விபத்து நடந்த நேரமும் இவர்கள் பெட்ரோல் பங்க் சிசிடிவில் பதிவான நேரமும் கிட்டதட்ட ஒத்துப்போகிறது. விபத்து நடப்பதற்கு 20-இல் இருந்து 30 நிமிடங்களுக்கு முன் சிவ சங்கர் பெட்ரோல் பங்கிற்கு சென்றது தெளிவாக உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் சிவ சங்கர் மது அருந்தியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனினும் இதுகுறித்த தகவல் உடற்கூராய்வு அறிக்கையில்தான் தெரியவரும். தற்போது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் முழு தகவல்களை வெளியிட உள்ளார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு