லட்டு சாப்பிடும் போட்டி - 30 நிமிடங்களில் 30 லட்டு சாப்பிட்ட சாம்பியன்

லட்டு சாப்பிடும் போட்டி - 30 நிமிடங்களில் 30 லட்டு சாப்பிட்ட சாம்பியன்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம் சுரேந்திரா நகரில் கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.

இதில் லட்டு சாப்பிடும் போட்டியில் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்ற மாவ்ஜிபாய் இந்த முறை தோல்வியை தழுவினார்.

30 நிமிடத்தில் 30 லட்டுகளை சாப்பிட்ட மற்றொரு போட்டியாளர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு 2000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

29 லட்டுகளை சாப்பிட்ட நபர் இரண்டாவது இடம் பிடித்தார். தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மாவ்ஜிபாய் 28 லட்டுகளை சாப்பிட்டு மூன்றாம் இடம் பிடித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு