'அதிபர் டிரம்புக்கு நரம்பு பிரச்னை' - வெள்ளை மாளிகை விளக்கம்

'அதிபர் டிரம்புக்கு நரம்பு பிரச்னை' - வெள்ளை மாளிகை விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

அதிபர் டிரம்பின் சமீபத்திய புகைப்படங்கள் அவரது கைகளின் பின்பக்கத்தில் சிறிய காயம் தெரிந்தது.

அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை, "அடிக்கடி கை குழுக்குவதாலும் மேலும் இருதய பிரச்னைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படும் ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதால் திசுக்களில் ஏற்படும் சிறிய காயம்தான் இது.

ஆஸ்பிரின் தெரபியின் பாதிப்புதான் இது. அதிபர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அதிபரின் கையில் இருந்த காயம் மற்றும் கால்களின் வீக்கம் குறித்து பலர் ஊடகங்களில் பேசி வந்தனர். எனவே, வெளிப்படைத்தன்மைக்காக அதிபர் தனது மருத்துவரின் குறிப்பை உங்களோடு பகிருமாறு கூறினார்" என்று தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு