திருமணப் பந்தலை களேபரமாக்கிய புழுதிக் காற்று

திருமணப் பந்தலை களேபரமாக்கிய புழுதிக் காற்று
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட புழுதி காற்று திருமண பந்தல் ஒன்றை சேதமாக்கிய காட்சி இது.

கடந்த 27ஆம் தேதி ஹிங்கோலி நகரில் நடந்த இந்த சம்பவத்தில் மணமகன் தோழர்களில் இருவர் காயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு கண்ணில் தீவிரமான காயம் ஏற்பட்டது.

இதேபோல, வேறொரு இடத்திலும் திருமண பந்தல் ஒன்றை புழுதி காற்று தாக்கியது. சத்ரபதி சம்பாஜி நகரில் நடந்த சம்பவத்தில் திருமண பந்தல் முழுமையாக சேதமடைந்தது. அந்த சமயத்தில் நூற்றுக்கணக்கானோர் அங்கு இருந்த நிலையில், நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு