அரசு தலையீட்டால் நாரையுடன் முறிந்த மனிதனின் நட்பு (காணொளி)
அரசு தலையீட்டால் நாரையுடன் முறிந்த மனிதனின் நட்பு (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்பவருடன் நட்பாக பழகி வந்த நாரையை பிரித்து பறவைகள் சரணாலயத்திற்கு மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு உடலில் ஏற்பட்ட காயத்துடன் தமது வீடருகே காணப்பட்ட இந்த நாரையை எடுத்து முதலுதவி செய்திருக்கிறார் முகமது ஆரிஃப்.
காயம் குணம் அடைந்த பிறகு நாரை பறந்து விடும் என்று ஆரிஃப் நினைத்தாலும் அது எங்கும் செல்லாமல் ஆரிஃப் வாழ்ந்த வீடு அருகிலேயே இருந்துள்ளது. அவர் எங்கு சென்றாலும் நாரையும் கூடவே பறந்து சென்றிருக்கிறது. இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்நிலையில், உத்தர பிரதேச அரசு தலையீட்டின்பேரில் நாரை ஆரிஃபிடம் இருந்து பிரிக்கப்பட்டு வன சரணாலயத்தில் விடப்பட்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



