You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி - எளிதான வெற்றி இழுபறி ஆனது ஏன்? - காணொளி
ஐ.பி.எல். தொடரில் பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மீண்டும் ஒரு ரோலர் கோஸ்டர் மேட்ச் நடந்து முடிந்தது. இரு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் குவித்த இந்த போட்டிகளில் கடந்த முறை எதிரணியான லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸை கட்டுப்படுத்த முடியால் தோல்வியைத் தழுவிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இம்முறை சேஸிங்கில் கோட்டை விட்டுள்ளது.
227 ரன்களைத் துரத்திய அந்த அணி, கேப்டன் டுப்ளெஸ்ஸி - மேக்ஸ்வெல் ஜோடி களத்தில் இருந்த போது எளிதில் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவர்கள் அவுட்டான பிறகு தடம் புரண்டது.
பெங்களூரு மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 250 ரன்களைக் குவித்தாலும் கூட வெற்றி உறுதியில்லை என்பதை நேற்றைய ஆட்டமும் நிரூபித்தது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த தவறுகளே, எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை கடினமாக்கிவிட்டது.
முதல் இன்னிங்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 226 ரன்கள் குவித்து இருந்த நிலையில், இரண்டாவதாக களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்