ஐபிஎல் மூலம் 'கம்பேக்' கொடுத்த நடராஜன் - இந்திய அணிக்கு திரும்புவாரா?

ஐபிஎல் மூலம் 'கம்பேக்' கொடுத்த நடராஜன் - இந்திய அணிக்கு திரும்புவாரா?
பிரசுரிக்கப்பட்டது

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன் மீண்டும் கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

கடந்த 2022 ஐபிஎல் தொடரில் காயம் தொடர்பான பிரச்னையில் சிக்கியவர், இந்திய அணிக்குள் மீண்டும் நுழையவே இல்லை.

2020 டிசம்பர் 02-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் நடராஜன்.

அதற்கடுத்த இரண்டே நாட்களில் டி20 போட்டிகளிலும், ஒரே மாதத்தில் இந்தியாவின் டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒரே தொடரில் மூன்று ஃபார்மெட்டில் காலடி எடுத்து வைத்தார்.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பயணம் நான்கே மாதத்தில் தேங்கியது.

சில சொதப்பல் ஆட்டங்கள் மற்றும் காயங்கள் நடராஜனின் கிரிக்கெட் வாழ்வை கேள்விக்குறியாக்கியிருந்த நிலையில், இன்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மீண்டும் களம் கண்டார் நடராஜன்.

சன் ரைசர்ஸ் அணி தோல்வியுற்றபோதும் நடராஜன் இந்த ஆட்டத்தில் இறுதி ஓவர்களில் கொடுத்த 'கம்பேக்' அந்த அணிக்கு ஓர் சாதகமான அம்சம்.

நடராஜன் இந்த இரு ஓவரில் கிடைத்த உத்வேகத்தை பயன்படுத்தி இந்த ஐபிஎல் சீசனில் அடுத்தடுத்த ஆட்டங்களில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: